by
" S & K FAN CLUB "


Album: Saguni

ஒரு பக்கம் 'சகுனி', இன்னொரு பக்கம் பெயரிடப்படாத படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மேக் அப் போட்டு வந்தார் கார்த்தி. 11-11-11 என்ற விசேஷ தேதியில் கார்த்தியின் பெயரிடப்படாத புதிய படத்தை தொடங்கினார்கள்.
மூன்று மாதங்களாக தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் இப்போது படத்தின் பெயரை அறிவித்திருக்கிறார்கள். 'அலெக்ஸ் பாண்டியன்'. இதுதான் படத்தின் தலைப்பு. 'மூன்றுமுகம்' படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் ரஜினியின் கேரக்டர் பெயர் இது. ரஜினி ரசிகர்களை கவரும் இந்த தலைப்பு, தனது படத்திற்கு அமைந்ததை படக்குழுவினரிடம் சொல்லி மகிழ்கிறாராம் கார்த்தி.
'தலைநகரம்', 'படிக்காதவன்' படங்களை தொடர்ந்து சுராஜ் இயக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். பருத்திவீரன்', 'சிங்கம்', 'சிறுத்தை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரித்து வருகிறார். கார்த்தி - அனுஷ்காவுடன், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
by
senthil